1959 ஆண்டு ஜனவரி 31ம் தேதி அது ....இடம் ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள உறைய வைக்கும் பனி படர்ந்த ஒரு மலை.
மலை ஏறும் சாகச குழு ஒன்று அந்த பயங்கர குளிர் சூழ்ந்த பனி மலை அடிவாரத்தை வந்து அடைந்து இருந்தது.
அந்த குழு ஒரு திறமையான மலை ஏறும் குழு . அவர்கள் அங்கே மலை ஏற வந்து இருந்ததில் ஒரு நோக்கம் இருந்தது. அவர்கள் அனைவருமே மலையேறுவதற்கான grade 2 தகுதியை பெற்றவர்கள். அவர்கள் இந்த மலை ஏற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு grade 3 வழங்கப்படும்.

அதனால் தான் Sverdlovsk Oblast எனும் இடம் வரை ரயில் பிடித்து பின் அங்கிருந்து லாரி பிடித்து 5 நாள் பயணம் கடந்து இந்த Kholat Syakhl எனும் மலையை வந்து அடைந்து இருந்தார்கள் (Kholat Syakhl எனும் ரஷ்ய பெயரின் ஆங்கில அர்த்தம் dead mountain)
அங்கே அடிவாரத்தில் தங்களுக்கான உணவு மற்றும் கருவிகளை தயார் செய்து எடுத்து கொண்டார்கள். பிப்ரவரி 1 ஆம் தேதி அவர்கள் அந்த மலையில் ஏற துவங்கினார்கள் அந்த மலையை கடந்து அடுத்து அவர்கள் செல்லவிருக்கும் இலக்கை அவர்கள் நிற்காமல் கடந்து செல்ல முடிவு செய்தார்கள்.
ஆனால் அன்று இரவு கடுமையான பனி பொழிவால் அவர்கள் பாதை கண்ணில் தெரியாமல் மறைந்து போனது. தங்கள் தவறை உணர்ந்து, அன்று இரவு அங்கேயே டென்ட் போட்டு தங்கிவிட முடிவு செய்தார்கள். அந்த 9 பேர் கொண்ட குழு அன்று தங்கள் வாழ்நாளில் கடைசி இரவு அது என தெரியாமல் அன்றைய இரவு அங்கேயே தங்கினார்கள். ஆம் அடுத்த நாள் அவர்களில் ஒருவர் கூட உயிரோடு இல்லை.
அவர்களின் சடலங்களை பிற்பாடு கண்டு பிடித்த போது, அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் எக்க சக்க ஆச்சர்யமும், மர்மமும் காத்திருந்தது.
முதலில் கிடைத்த 6 சடலத்தில் உயிரை போக்கும் எந்த காயமும் இல்லை அவர்கள் ஹைப்போ தெர்மியாவால் (குளிரால் ) இறந்து இருப்பதாக முடிவு செய்தார்கள். அதில் ஒருவருக்கு மட்டும் கபாலத்தில் லேசாக விரிசல் கண்டு இருந்தது. ஆனால் அது உயிரை குடிக்க போதுமானதல்ல என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

மீதி 3 சடலங்கள் கிடைத்த போது தான் பார்த்தவர்களுக்கு பித்து பிடித்தது. அங்கே நடந்துள்ளது விளக்க முடியாத ஒரு மர்மம் சம்பவம் என்று புரிந்தது. அங்கு கிடைத்த சடலங்களில் 3 பேரில் ஒருவர் மண்டை பிளந்து இருந்தது .இருவருக்கு நெஞ்சு எலும்பு நொறுக்க பட்டிருந்தது.

அந்த குழுவில் dubunina என்ற பெண்ணின் பிணத்தை ஆராய்ந்தவர்கள் மேலும் அதிர்ந்தார்கள்.

அந்த பிணத்தில் நாக்கு துண்டிக்க பட்டு இருந்தது மேலும் ஒரு கண்ணை காண வில்லை. முகத்தின் தோல் கொஞ்சம் பிய்க்க பட்டு இருந்தது. மேலும் மண்டை ஓட்டில் சிறு பகுதி உடைத்து எடுக்கப்பட்டிருந்தது.
அந்த மர்ம மரணத்தை சரியாக விளக்க முடியாமல் நிபுணர்கள் திணறினார்கள். அவர்களின் சடலங்கள் ஒரே இடத்தில் கிடைக்க வில்லை. மாறாக வெவ்வேறு இடத்தில் கிடைத்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.. அதில் ஒருவன் உடல் மட்டும் பாதி புதைக்கப்பட்ட நிலையில் இருந்தது.
அங்கே மேலும் ஒரு விசித்திரமாக, அவர்கள் தங்கள் உடைகளை அவர்களுக்குள் மாற்றி மாற்றி அணிந்திருந்தார்கள் .

அவர்கள் தங்கி இருந்த டென்ட் உள் பக்கமாக கிழிக்க பட்டிருந்தது. அங்கிருந்த காலடி தடங்களை வைத்து பார்க்கும் போது நடு ராத்திரியில் திடீரென டென்டை கிழித்து கொண்டு வெளியே ஓடி வந்து இருப்பதாக காட்டியது. நன்கு சாப்பிட்டு தூங்கிய அந்த குழு திடீரென நள்ளிரவில் டென்டை கத்தியால் கிழித்து கொண்டு வெளியேற வேண்டிய தேவை என்ன ? அந்த குழுவிற்கு நள்ளிரவில் நடந்த மர்ம பயங்கரம் தான் என்ன ?
இதுபோன்ற பல கேள்விகள் அதிகாரிகளையும் பொதுமக்களையும் சுற்றி வந்தாலும் கடைசி வரை அந்த வழக்கில் யாரும் சரியான விளக்கம் சொல்ல முடியவில்லை.
அங்கு வாழும் மான்சி இன மக்களால் அவர்கள் தாக்க பட்டிருக்கலாம் என்றார்கள். ஆனால் அந்த அதீத அழுத்தத்தை கொடுத்து நெஞ்சை நொறுக்குவது மனித சக்திக்கு அப்பார் பட்டு இருந்ததும் அந்த இடத்தில் வேறு எந்த காலடி தடமும் கிடைக்காததும் இடித்தது. இதை ஏதோ கொடூர விலங்கு செய்து இருக்கலாம் என்றார்கள் ஆனால் அப்போதும் காலடி தடம் இருந்து இருக்க வேண்டுமே.
'குளிர் அதிகமாகி அனைவரும் திடீர் பைத்தியம் பிடித்து மன நிலை பாதிக்க பட்டார்கள் 'என்று ஒரு தியரி சொன்னது ஆனால் காணாமல் போன கண் நாக்கு எல்லாம் தியரிக்கு பொருந்தி வர வில்லை.

ஏதோ infra sound என்று ஒரு திகில் தியரியும் சொன்னார்கள் அதாவது இரவில் மலை சிகரங்களில் ஒரு வகை ஒலி எதிரொலிக்குமாம் அதை கேட்டு விட்டால் மனிதன் மன நிலை பாதிக்க பட்டு பைத்தியம் ஆகி விடுவானாம்.
இப்படி நிறைய தியரி இருந்தும் இன்று வரை அன்று அந்த பனி மலையில் மைனஸ் 25 டிகிரி குளிரில் அன்று நடந்ததை யாராலும் சரியாக விளக்க முடியவில்லை.
இந்த இடத்தில் Yuri Yudin, எனும் அதிர்ஷ்ட சாலியை பற்றி சொல்ல வேண்டும் அந்த குழு உண்மையில் 9 பேர் அல்ல இவருடன் சேர்த்து 10 பேர் ..பாதி வழியில் உடல் நிலை சரியில்லாமல் திரும்பிவிட்டவர் இவர். ஐயோ தன்னால் போக முடியவிலையே என்று வருத்த பட்டு புலம்பி கொண்டிருந்தவர் ( சம்பவம் கேள்வி படும் வரை... )
பிற்காலத்தில் ஒரு பேட்டியில் "நான் கடவுளை காண நேர்ந்தால் தயவு செய்து அன்றிரவு என் நண்பர்களுக்கு நடந்தது என்ன என்று மட்டும் சொல் என்று கேட்பேன் " என்றார்.
சரியாக இந்த சம்பவம் நடந்த அதே நேரம்........
சம்பவ இடத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தள்ளி இருந்த இன்னோரு மலை ஏறும் குழு ஒன்று இந்த சம்பவ இடத்தில் வானத்தில் மர்மமான ஆரஞ்சு நிற வட்ட வடிவ அமைப்பு ஒன்றை கண்டதாக பதிவு செய்தார்கள். அந்த பிப்ரவரி முதல் மார்ச் வரை அப்படி பட்ட ஆரஞ்சு வட்டங்களை பார்த்ததாக (பறக்கும் தட்டு ???) மேலும் சில பேர் பதிவு செய்தார்கள் அதில் ராணுவ ஆட்களும் கூட அடக்கம்.
அந்த ரஷ்ய சம்பவம் Dyatlov pass incident என்ற பெயரில் பின்னனாளில் புகழ் பெற்றது (அந்த டீம் லீடர் பெயர் )
அன்று அவர்களுக்கு நடந்தது என்ன என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்.
✴ ✴ ✴ ✴


Comments
Post a Comment