- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற "டைரி" திரைப்படம், சீனாவில் உண்மையில் நடந்ததாக கருதப்படும் ஒரு திகில் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
![]() |
| Diary Movie - Bus 375 |
இந்த கதை நவம்பர் 14, 1995 அன்று பெய்ஜிங்கில் நடந்தது. நள்ளிரவில், யுவான்-மிங்-யுவான்(Yuan-Ming-Yuan) பேருந்து முனையத்திலிருந்து புறப்படும், பேருந்து எண் 375 என்கிற கடைசிபெருந்து Chiang-Shan (Fragrant Mountains) இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தது.
பேருந்தில் ஓட்டுநரும், ஒரு பெண் நடத்துனரும் இருந்தனர். அன்றைய இரவு கடுமையான குளிர் மற்றும் கடுமையான காற்று வீசியது. கோடைகால அரண்மனைக்கு(Summer Palace) அடுத்த தெற்கு வாயிலில் நின்று கதவு திறந்ததும் பேருந்தில் நான்கு பயணிகள் ஏறினர். ஒரு வயதான பெண்மணி, ஒரு இளம் ஜோடி மற்றும் ஒரு இளைஞன்.
இளம் தம்பதிகள் முன்பக்கத்தில் சென்று, ஓட்டுநருக்குப் பின்னால் அமர்ந்தனர், வயதான பெண்ணும் அந்த இளைஞனும் பஸ்ஸின் மறுபுறம் கதவுகளுக்குப் பக்கத்தில் அமர்ந்தனர். பெரும் அமைதியான அந்த இரவு நேரத்தில் சாலையில் வேறு எந்த வாகனமும் செல்லவில்லை. பேருந்தின் என்ஜின் சத்தம் மட்டுமே அன்றைய இரவு ஒலித்துக்கொண்டிருந்தது.
சிறிது நேரம் கழித்து, சாலையின் ஓரத்தில் இரண்டு பேர் நின்றுகொண்டு கை அசைப்பதை கவனித்த டிரைவர் பேருந்தை நிறுத்தினார். கதவு திறந்ததும் மூன்று பேர் ஏறினர். அதில் இரண்டு பேர் சேர்ந்து ஒருவரை தாங்கிப்பிடித்தபடியே பேருந்தில் ஏறி கடைசி இருக்கையில் அமர்ந்தனர். மூவரும் குயிங் வம்சத்தின் பாரம்பரிய சீன ஆடைகளை அணிந்திருந்தனர் மற்றும் அவர்களின் முகங்களில் வெளிறிய மஞ்சள் நிறத்திலான வண்ணம் பூசப்பட்டிருந்தது. இதில் நடுவில் இருந்தவரின் தலை தொங்கியபடியே இருந்ததால், அவரது முகத்தை யாரும் பார்க்க முடியவில்லை.
பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் பயந்து, ஒருவரையொருவர் பதட்டத்துடன் பார்த்துக்கொண்டனர். பெண் நடத்துனர், “பயப்படாதீர்கள். ஒருவேளை அவர்கள் ஆடை நாடகத்தை படமாக்கும் நடிகர்களாக இருக்கலாம். மது அருந்திய மயக்கத்தில் வேலை முடிந்து , உடை மாற்ற மறந்துவிட்டிருக்கலாம்” என அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பேருந்தின் பின்புறம் அமர்ந்திருந்த மூன்று நபர்களை கிழவி திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு பயங்கரமான அமைதி நிலவியது. பயணிகள் யாரும் எதுவும் பேசவில்லை. வெளியிலிருந்து வேகமாக பேருந்தினுள் நுழையும் காற்றின் சத்தம் மட்டுமே கேட்டது.
மூன்று அல்லது நான்கு நிறுத்தங்களுக்குப் பிறகு, இளம் தம்பதிகள் பேருந்திலிருந்து இறங்கினர். பஸ் டிரைவரும், பெண் நடத்துனரும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த மூதாட்டி திடீரென்று எழுந்து தன் முன்னால் அமர்ந்திருந்த இளைஞனை அடித்தாள். எல்லாரிடமும் தன் பர்ஸைத் திருடிவிட்டான் என்று சத்தமிட்டுப் பெரும் ரகளை செய்ய ஆரம்பித்தாள்.
அந்த இளைஞன் எழுந்து அவளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டான், ஆனால் வயதான பெண் அவனுடைய சட்டை காலரைப் பிடித்து இழுத்தபடியே, காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும் அடுத்த நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்துமாறு நடத்துனரிடம் கூறினார். அந்த இளைஞன் அப்படியே அமைதியாகிவிட்டான்.
பேருந்து நின்றதும் மூதாட்டி அந்த இளைஞனை வெளியே இழுத்துச் சென்றுள்ளார். அங்கிருந்து மீண்டும் புறப்பட்ட பேருந்து சிறிது தூரம் சென்று மறைந்துவிட்டதும், அந்த மூதாட்டி நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார்.
"காவல் நிலையம் எங்கே?" என்று அந்த இளைஞன் கேட்டான்.
"இங்கு காவல் நிலையம் எல்லாம் ஒன்றும் இல்லை, நான் உன் உயிரைக் காப்பாற்றியுள்ளேன்!" என்று வயதான பெண் பதிலளித்தார். "
"என்ன? எப்படி என் உயிரைக் காப்பாற்றினாய்?” என அந்த இளைஞன் குழப்பத்துடன் கேட்டான்.
"அந்த மூன்று பேரும் பேய்கள்!, அவர்கள் பேருந்தில் ஏறியதிலிருந்து, அவர்கள் மீது எனக்கு சந்தேகம் இருந்தது, அதனால் நான் அவர்களை அடிக்கடி திரும்பிப் பார்த்தேன். ஜன்னல் வழியாக வேகமாக காற்று வீசியபோது, அவர்களின் நீண்ட அங்கிகளைத் மேலே பறந்தது. அப்போது அவர்களுக்குக் கால்கள் இல்லாததைக் நான் கண்டேன்!” என வயதான பெண்மணி பதிலளித்தார்.
அந்த இளைஞன் ஆச்சரியத்துடன் அந்த மூதாட்டியைப் பார்த்தான். அவனுக்கு வியர்க்க ஆரம்பித்தது. பயத்தில் அவனால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.
உடனே அந்த வயதான பெண்மணி காவலர்களுக்கு போன் செய்து தான் பார்த்த அனைத்தையும் கூறினார்.
அடுத்த நாள், பேருந்து எண் 375 இலக்கை வந்து அடையாமல், அது ஓட்டுநர் மற்றும் பெண் நடத்துனருடன் மாயமானது என்பதை போலீசார் கண்டறிந்தனர். நகரம் முழுவதும் தேடியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. அந்த மூதாட்டியையும், இளைஞனையும் விசாரித்த போலீஸ், அவர்களின் கதையை உதறித் தள்ளிவிட்டு, அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று முடிவு செய்தனர்.
அன்று இரவு, தி பெய்ஜிங் ஈவினிங் நியூஸ் மற்றும் தி பெய்ஜிங் நியூஸ் ஆகியவை கதையைப் பற்றி செய்தி வெளியிட்டன. மூதாட்டி, இளைஞன் இருவரும் தொலைக்காட்சியில் நேரலையாக பேட்டி அளித்தனர்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, காணாமல் போன பஸ்ஸை போலீசார் கண்டுபிடித்தனர். இது நறுமண மலைகளிலிருந்து(Aromatic Mountains) 100 கிமீ தொலைவில் உள்ள மியுன் நீர்த்தேக்கத்தில்(Myun Reservoir) மூழ்கியிருந்தது. பேருந்தினுள் டிரைவர், பெண் நடத்துனர், அடையாளம் தெரியாத ஆண் ஆகிய மூன்று உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன.
இந்த வழக்கைச் சுற்றி இருந்த பல மர்மங்கள்:
- மியூன் நீர்த்தேக்கத்திற்குச் செல்லும் வரை பேருந்தில் போதிய எரிவாயு இல்லாததால், போலீசார் பெட்ரோல் டேங்கைத் திறந்து பார்த்தபோது, அதில் ரத்தம் நிரம்பியிருப்பதைக் கண்டனர்.
- காணாமல் போன இரண்டு நாட்களுக்குப் பிறகு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை மிகவும் மோசமாக சிதைந்திருந்தன. அது கோடைகாலமாக இருந்தாலும்கூட, சிதைவு செயல்முறை இவ்வளவு விரைவாக இருக்க முடியாது. பிரேதப் பரிசோதனையில் உடல்களில் சந்தேகப்படும்படியான எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர்களுடைய உடல்கள் எப்படி இவ்வளவு சீக்கிரம் சிதைந்தது என மருத்துவர்கள் குழம்பி போயினர்.
- மியூன் நீர்த்தேக்கத்திற்குச் செல்லும் ஒவ்வொரு நுழைவாயிலிலும் உள்ள அனைத்து பாதுகாப்பு கேமரா நாடாக்களையும் போலீசார் கடுமையாக ஆய்வு செய்தனர், ஆனால் அவற்றில் எதிலும் பேருந்து காணப்படவில்லை.




Comments
Post a Comment