நீங்கள் 1900-ல் பிறந்ததாக கற்பனை செய்து பாருங்கள்...!

உலகம் முழுவதுமே கொரோனா பிடியில் சிக்கித்தவித்து வரும் நிலையில், 86 வயதான பெண் ஒருவர் தன்னுடைய பேத்திக்கு அனுப்பிய கடிதம்.

இப்போது ஒருவிதமான பயம், அச்சம், பீதி கண்டறிய முடியாத கடினமான ஒன்று அனைவரையும் தொற்றியுள்ளது. இந்த நேரத்தில் நான் கூறும் சிறிய அளவிலான காட்சியை கற்பனை செய்து பாருங்கள்.

நீங்கள் 1900-ல் பிறந்த ஒரு குழந்தை, உங்களுடைய 14 வது பிறந்தநாளில், முதலாம் உலகப் போர் தொடங்கி, உங்கள் 18 வது பிறந்தநாளில் முடிகிறது. அந்த போரில் 22 மில்லியன் மக்கள் அழிந்து போகிறார்கள்.

அதே ஆண்டின் பிற்பகுதியில், ஒரு ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோய் உலகம் முழுவதும் தீவிரமடைகிறது. உங்களுடைய 20 வயது முடியும் வரை அது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 50 மில்லியன் மக்கள் இறந்துவிடுகிறார்கள். ஆனால் அதில் நீங்கள் உயிர்பிழைத்துவிட்டீர்கள்.


உங்களுடைய 29-வது பிறந்தநாளை கொண்டாடும்போது, பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கிறது. பணவீக்கம், வேலையின்மை, பஞ்சம் உள்நாட்டு உற்பத்தி குறைவு என பெரும் சோதனை ஏற்படுகிறது.

இது உங்களுடைய 33 வயது வரை தொடர்கிறது.

நீங்கள் 39 வயதை எட்டும்போது, ​​இரண்டாம் உலகப் போர் தொடங்கி, 45 வயதில் முடிவடைகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில், 75 மில்லியன் மக்கள் போரில் அழிந்து போகிறார்கள்.

இதற்கிடையில் உங்களுடைய 40 வயதில் பெரியம்மை என்னும் தொற்றுநோய் தொடங்கி 300 மில்லியன் மக்களைக் கொல்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இதிலும் நீங்கள் உயிர்பிழைத்துவிட்டீர்கள்.

50 வயதில் கொரியப்போர் துவங்குகிறது. இதில் 5 மில்லியன் மக்கள் இறந்துவிடுகிறார்கள்.

இதுஒருபுறமிருக்க நீங்க பிறந்ததில் இருந்தே ஒவ்வொரு கோடையிலும் போலியோ தொற்றுநோய்களின் பயத்தை அனுபவித்து வருகிறீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு முடங்கிப்போய் / அல்லது இறப்பதை நீங்கள் நேரில் பார்த்து வளர்கிறீர்கள்.

55 வயதில் வியட்நாம் போர் தொடங்கி 20 ஆண்டுகளுக்கு முடிவடையாமல் நடக்கிறது. அந்த மோதலில் 4 மில்லியன் மக்கள் அழிந்து போகிறார்கள். பனிப்போரின் போது,  ​​நீங்கள் ஒவ்வொரு நாளும் அணுசக்தி தாக்குதலுக்கு பயந்துபோய் வாழ்க்கையை கடக்கிறீர்கள்.

நீங்கள் 75 வயதை எட்டும்போது, ​​வியட்நாம் போர் இறுதியாக முடிகிறது. இவை அனைத்தையும் கடந்து முடித்து நிம்மதிப்பெருமூச்சு விடும்போது உங்களுடைய வயதும், வாழ்க்கையும் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தது என்றால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்.

ஆனால் இப்போது அப்படி இல்லை, எல்லாமே வளர்ச்சியடைந்துவிட்டது. நீங்கள் வீட்டில் இருந்தாலும் வயிற்றுப்பசிக்கு உணவு, பொழுதை கழிக்க இணையத்தளம், தொலைக்காட்சி என பல இருக்கின்றன.

1985-க்கு முன் பிறந்த உங்களுடைய தாத்தா - பாட்டி ஆகியோருக்கு பொழுதை கழிக்க எதுவும்  கிடையாது. எந்நேரமும் பயத்தில் தான் இருந்தார்கள். மேலே நீங்கள் பார்த்த அத்தனையையும் அனுபவித்து அதிலிருந்து தப்பிப்பிழைத்தவர்கள்.

ஆனால் உங்களுக்கான தேவைகள் அனைத்தும் கிடைத்தும் கூட, இந்த நேரத்தில் வீட்டில் முடங்கி கிடக்க மறுக்கிறீர்கள் என கூறியுள்ளார்.


Comments