லிப்டில் ஆவியாக சுற்றும் இளம்பெண்! முடிச்சு அவிழ்க்கப்படாத மர்மக்கொலை - 1

2013 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சிசில் எனும் ஒரு ஹோட்டலில் சில அறைகளின் குழாய்களிலிருந்து சிவப்பு நிறத்திலான தண்ணீர் வருவதாகவும் அவை துர்நாற்றம் வீசுவதாகவும் வாடிக்கையாளர்கள் புகார் செய்தனர்.

பின் பராமரிப்பு நபர்கள் மேல்மாடியில் இருக்கும் நீர் தாங்கிகளை பார்க்கச் சென்றபோது தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில்  ஓர் பெண்ணின் சடலம் காணப்பட்டது. உடனே லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிசாரிடம் தகவல் தெரிவித்தனர்.

அதன் பின் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு சென்றனர். சம்மந்தப்பட்ட பெண் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், எலிசா லாம் ( elisa lam ) என்கிற 21 வயதுடைய University of British Columbia-வில் பயின்று வரும் மாணவி என்பது தெரியவந்தது.



அடுத்த சில நாட்களில் பொலிஸார்  சி.சி.டி.வி. காணொளி ஒன்றை வெளியிட்டனர். இது உலகில் மிகப்பெரிய ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.   பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று இறந்த நிலையில் மீட்கப்பட்ட, லிப்ட்டினுள் உள் நுழைவதும் வெளியேறுவதும், பயந்து ஒளிந்து கொள்வதும் கைகளால் சைகை காட்டுவது என்று விசித்திரமான முறையில் நடந்து கொள்கிறார்.

பிப்ரவரி முதலாம் தேதியில் இருந்து தான் எலிசா காணாமல் போய் உள்ளார். இந்த வீடியோவில் தான்  எலிசா லாம் கடைசியாக  உயிருடன் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னரே அவர் இறந்துள்ளார்.

இவ்வாறு வெளியிடப்பட்ட சி.சி.ரி.வி. காணொளியில் தான் பலரும் சந்தேகப்படுகின்றனர். எலிசாவின் விசித்திரமான செயல்கள் அவர் பைபோலார் டிசார்டர் (bipolar disorder)  எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், அதன் காரணமாகவே அவர் இவ்வாறு விசித்திரமாக நடந்து கொண்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில் இந்த நோயின் பாதிப்பால் தான் அவர் நீர்த் தாங்கியில் விழுந்து தற்கொலை செய்துள்ளார் என்றனர்.


ஆனால் இந்த காணொளியை பார்த்த அநேகமானோர் அவ்வாறல்ல ‘இவரின் செயல்கள் இவர் யாருக்கோ பயந்து ஒளிந்து கொண்டிருப்பது போல் இருக்கின்றது.

மேலும் லிப்டினுள் வந்ததும் எல்லா பொத்தான்களையும் அழுத்துகிறார். இவ்வாறு அழுத்துவதால் உள்ளிருக்கும் நபர் எந்த மாடிக்கு செல்கின்றார் என்று தெரியாமல் இருக்கும் எனவே தான் அவர் அவ்வாறு அழுத்தி உள்ளார்.

மேலும் லிப்டினுள் ஒரு மூலையில் ஒளிந்துக் கொள்வதும், லிப்ட் கதவு மூடாமல் இருப்பதால் பயந்து வெளியே வந்து பார்க்கிறார் இது போன்ற இவரின் செயல்கள் இவர் யாருக்கோ பயந்து உள்ளார் என்று தெரிகிறது எனத் தெரிவிக்கின்றனர்.


இவ்வாறு பயந்த எலிசா மீண்டும் லிப்டினுள் வந்து எல்லா பொத்தான்களையும் அலுத்துகிறார் பின் வெளிய சென்று யாருடனோ உரைடுவது போல் காட்சி உள்ளது. பின் அங்கிருந்து எலிசா காணாமல் போகிறார்.

இணையத்தில் வைரலாக பரவிய இந்த காணொளி திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்று பலர் குற்றம் சாட்டியுள்ளனர். பொலிஸார்  அவர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அதனால் தான் மேல் மாடிக்கு சென்று தற்கொலை செய்துள்ளார் என்று குறிப்பிடுகின்றனர்.

ஆனால் பிரச்சினை இங்குதான் ஆரம்பமாகிறது, அந்த ஹோட்டலின் மேல் மாடிக்கு செல்ல வேண்டுமாயின் பாதுகாப்பு கடவை எண்களை அழுத்த வேண்டும்.

அக் கடவை பராமரிப்பு நபர்களுக்கு மட்டுமே தெரியும் மேலும் கதவை உடைத்தால் ஹோட்டல் முழுக்க அலாரம் அடிபடும். பின் எவ்வாறு எலிசா மேல் மாடிக்கு சென்று இருக்க முடியும்?


இப்படி இருக்க எலிசா இறந்து கிடந்த நீர் தாங்கியோ 12 அடி உயரமானது அதில் ஏறுவது என்றால் ஏணி தேவைப்படும் ஆனால் மேல் மாடியிலோ ஏணி கிடையாது.

அவ்வாறு எலிசா ஏணிவைத்து ஏறி தற்கொலை செய்தால் அந்த இடத்தில் பயன்படுத்திய ஏணி இருக்க வேண்டும் ஆனால் அங்கோ ஏணியும் கிடையாது, இவ்வாறு இருக்க எலிசா எப்படி நீர் தொட்டியினுள் தற்கொலை செய்வார்? யாரோ ஒருவர் தான் எலிசாவை கொலை செய்து நீர்த் தொட்டியில் எறிந்து விட்டு ஏணியையும் எடுத்து சென்றுள்ளார்.

அதேசமயம் எலிசாவின் பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எலிசாவிற்கு இவ்வாறு நோய் கிடையாது என்றும் கூறுகின்றனர்.

இவ்வாறு பல கேள்விகள், சந்தேகங்கள், கருத்துக்கள் என பரவலாக்கப்பட்டாலும் போலீஸ் தரப்பில் இருந்து வந்த பதில் ‘அவர் பைபோலார் டிசார்டர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் அதற்கான மாத்திரைகளையும் அவர் எடுத்துள்ளார்’ என்கிற ஒரே பதிலே.



இந்த மார்ம கொலை வழக்கு மூன்று விதமான கோணங்களில் பார்க்கப்படுகிறது.

01 – எலிசா பைபோலார் டிசார்டர் என்கிற நோயால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துள்ளார்.

02 – அந்த ஹோட்டலில் உள்ள ஒரு நபராலே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேல் கதவு திறக்க கடவுச் சொல், ஏணி மற்றும் சி.சி.ரி.வி. யில் சிக்காமல் இருந்தது போன்ற சில காரணங்களால்,

03 – எலிசா அமெரிக்காவின் எதோ ஒரு ரகசியத்தை தெரிந்துகொண்டதாகவும் அதனாலையே அவரை கொலை செய்து இருக்கலாம் என்றும் அதிகாரத்தில் இருப்பவர்களின் தலையீடு இருப்பதால் தான் போலீசாரும் இதை மூடி மறைக்கின்றது என்றும் கூறப்படுகிறது. மேலும் எலிசா பென்டகன் தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றும் வெளியிட்டு இருந்தார்.
இந்த சம்பவத்திற்கான மர்ம முடிச்சு இன்று வரை அவிழ்க்கப்படவில்லையென்பது மட்டுமே கேள்விக்குறியாக உள்ளது.

Comments