- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இரு மசூதிகளில் நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டதோடு, 40க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வரும் சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடந் பகுதியில் உள்ள மசூதிகளில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் உள்ளூர் நேரப்படி 1.30 மணிக்கு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
கோரமான இந்த சம்பவத்தில் இதுவரை 49 பேர் பலியானதோடு, 40க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவமானது உலக நாடுகள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு குவிந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கைது செய்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் 3 ஆண்கள், ஒரு பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 28 வயதான Brenton Tarrant என்பது கண்டறியப்பட்டது.
இந்த தாக்குதலுக்குப் பின் மிகப்பெரிய அளவில் மற்றொரு தாக்குதல் நடத்த வாகனங்களில் வெடிபொருட்களையும் அவர்கள் நிரப்பி வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.
இதற்கிடையில் தாக்குதல் நடத்தும்போது, ஹீக்ளி பார்க் மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தியவர் பேஸ்புக், இன்ட்ராகிராமில் நேரலை செய்து கொண்டே துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்தது.
மனதை பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ காட்சியை கண்டறிந்து போலீசார் தொடர்ந்து நீக்கி வருகின்றனர்.

துப்பாக்கி ஏந்திய ஒருவர் மசூதிக்குள் நுழைந்தது முதல் துப்பாக்கி சூடு நடத்துவதும், தப்பி ஓடுபவர்கள் மீது சுட்டு வீழ்த்துவதுமாக அந்த வீடியோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை ஆனால், இனவெறி காரணமாக நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/Aishwar76470746/status/1106609748772900870
யார் இந்த Brenton Tarrant ?
அவுஸ்திரேலியாவின் New South Walesஇலுள்ள Grafton என்னும் பகுதியில் வளர்ந்தவர் இந்த பிரெண்டன்.
தன்னைக் குறித்து ஒரு சாதாரண வெள்ளையர் என்று கூறும் பிரெண்டன், ஒரு நடுத்தர, குறைந்த வருவாய் உள்ள குடும்பத்தில், அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஆங்கில பூர்வீகம் கொண்டவர்.
பிரெண்டனின் தந்தையான Rodney ஒரு விளையாட்டு வீரர். 49 வயது இருக்கும்போது புற்றுநோயால் அவர் இறந்துபோனார்.
பிரெண்டனின் தாயும் சகோதரியும் இன்னும் அதே பகுதியில் வசிப்பதாக கூறப்படுகிறது. படிப்பில் பெரிய ஆர்வம் எதுவும் இல்லாத பிரெண்டன், டிஜிட்டல் கரன்சி ஒன்றில் முதலீடு செய்ததில் கிடைத்த பணத்தை வைத்து பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.
கடுமையாகவும், ஒழுங்காகவும் உடற்பயிற்சி செய்யும் பிரெண்டன், பின்னர் ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராகியிருக்கிறார்.
அரசியல், மதம் குறித்து ஒருபோதும் பேசாத பிரெண்டன், ஐரோப்பா, தென் கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது தான் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.'
தனது முந்தைய பேஸ்புக் செய்தி ஒன்றில் தான் பாகிஸ்தான் சென்று வந்தது தொடர்பாக, பிரெண்டன், உலகிலேயே மிகவும் உண்மையான, இரக்க மனம் படைத்த மற்றும் விருந்துபசரணை செய்யும் மக்கள் பாகிஸ்தானியர்கள்தான் என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்ப்டியெல்லாம் பேசியவர் எதிர்க்கு இஸ்லாமியர்களை படுகொலை செய்தார் என்பது புரியாத புதிராக உள்ளது.






Comments
Post a Comment