- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
உலகளவில் பிரபலமானதாக மக்கள் வியந்து பார்க்கும் பாரிஸில் உள்ள நோட்ரே டேம் கதீட்ரல் ஆலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பாரிஸ் நகரத்தில் உள்ள 850 வருட பழமையான நோட்ரே டேம் கதீட்ரல் ஆலயம் உலக அளவில் மிகவும் பிரபலமானது.
இதனை பார்வையிடுவதற்காக வருடம் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகை தருவார்கள்.

இந்த நிலையில் ஆலயத்தின் மேற்கூரையில் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 5.50 மணியளவில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அணைப்பதற்காக பிரான்ஸ் நாட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
தேவாலயத்தின் சிகரம் தற்போது 6 மில்லியன் யூரோ (6.8 மில்லியன் டாலர்) செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

தீ விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படாத நிலையில், இந்த மறுசீரமைப்பு பணிகள் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பயங்கரமான தீ விபத்தை தடுக்க, தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர் என பாரிஸ் மேயர் ஆன் ஹிடால்கோ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நோட்ரே டேம் கதீட்ரல் ஆலயத்தில் ஏற்பட்டிருக்கும் தீ விபத்து பார்ப்பதற்கு பயங்கரமானதாக இருக்கிறது. விரைந்து செயல்பட்டு ஹெலிகாப்டர் மூலம் அதனை அணைக்க முயற்சி செய்யுங்கள் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இத்தகைய அதிர்ச்சியூட்டும் தீ விபத்தால் தொலைக்காட்சி உரையை ஒத்திவைத்துவிட்டு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், எமது லேடி லேடி ஆஃப் பாரிஸ் பயங்கரமான தீ விபத்தில் சிக்கியிருப்பதை மிகுந்த சோகத்துடன் பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Comments
Post a Comment