அமேசான் நிறுவனரின் அந்தரங்க படங்கள்... சவுதி பத்திரிக்கையாளர் கொலை: பின்னணியில் உள்ள சதி!


சவுதி பத்திரிக்கையாளர் jamal khashoggi கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கும், உலகின் நம்பர் 1 பணக்காரர் என அறிவிக்கப்பட்ட அமேசான் நிறுவனரின் மனைவி விவாகரத்து பெற்றதற்கும் பெரிய தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



அமேசான் நிறுவனர் Jeff Bezos :

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலகின் நம்பர் 1 பணக்காரர் என அமேசான் நிறுவனர் Jeff Bezos அறிவிக்கப்பட்டார். அடுத்த சில தினங்களில் அவருடைய மனைவி விவாகரத்து பெற்றதால் சொத்து பாதியளவிற்கு பிரிந்தது.



அதனை தொடர்ந்து சில நாட்களிலே Jeff Bezos, தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வரும் Lauren Sanchez  என்பவருடன் ஆபாசமாக பேசியிருப்பதை போன்ற புகைப்படங்கள் Enquirer's நாளிதழில் வெளியாகியது.
                                                

இதனால் பல பெண்களுடன் Jeff Bezos நெருக்கமாக இருந்திருப்பதை பார்த்து தான், அவருடைய மனைவி தற்போது விவாகரத்து பெற்றதாக செய்திகள் வலம்வர துவங்கின.

அதேசமயம் Jeff Bezos அந்தரங்க புகைப்படங்கள் வெளியாவதற்கு பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் செய்திகள் தெரிவித்தன.

சவுதி பத்திரிக்கையாளர் jamal khashoggi:

உலகின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர் என அறியப்பட்ட jamal khashoggi, அமெரிக்காவில் தங்கி சவுதி அரேபிய மன்னர் சல்மானின் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் எழுதி வந்தார்.

                          

இவர் கடந்த 2018 செப்டம்பர் 28ம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்றிருந்த போது கொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கும் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

இரண்டு சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பு:

சவுதி முடி இளவரசர் முகமது பின் குறித்து jamal khashoggi எழுதி வந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை வேறு யாருடையதும் அல்ல. அது அமேசான் நிறுவனர் Jeff Bezos பத்திரிகை தான். அவருடைய அனுமதியின் பேரிலே jamal khashoggi தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதி வந்துள்ளார்.

                          

துப்பறிவாளர் கெவின் டி பெக்கர் அறிக்கை:
இந்த நிலையில் துப்பறிவாளர் கெவின் டி பெக்கர் பொதுவெளியில் தன்னுடைய அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில், இளவரசர் முகமது பின் சல்மான் நேரடி கண்காணிப்பில் Jeff Bezos செல்போனில் சவுதி அரசு ஊடுருவியுள்ளது. தன்னை பற்றி தொடர்ச்சியாக வெளியான கட்டுரைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே Jeff Bezos-ன் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

Comments