- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தாய்லாந்து நாட்டில் புவெங் கான்
மாகாணத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குகை பொதுமக்களிடையே பெரும்
ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகா குகை என பெயரிடப்பட்டுள்ள இதனை காண தற்போது
பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.
பாறையின் மேற்பரப்பைக் கொண்டுள்ள இது, ஒரு பாம்பின் சுருண்ட உடல் மற்றும் பெரிய பாம்பின் செதில்களை கொண்டிருப்பது போல தோற்றமளிக்கிறது.
மர்மமான பு யு லூவின் நகரத்தின் புராணக்கதை மற்றும் உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, ஒரு மாபெரும் பாம்பு இறந்து கல்லாக மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பாம்பு இறந்துவிட்டதாக புராணக்கதைகளுடன் ஒத்துப்போகின்றன.
பாம்பின் உடலுக்குள் சென்ற தாதுக்கள்
நீர் போன்றவை அழுத்தத்தில் ஒரு பாறையாகி நீண்ட நாள் கழித்து மக்கள் பார்ப்பதற்கு, பாம்புகளின்
எச்சங்கள் இப்படி தெரிகின்றது எனவும் சில புரளிகள் பரவி வருகிறது.
அந்த நகரத்தை ஆட்சி செய்தி வந்த “யூ லூ கிங்” என்கிற ஒரு
ராஜாவின் கதையைச் சொல்லும் ஒரு புராணக்கதை உள்ளது. அதில், மனித உருவில்
இருக்கும் பாம்பு இனத்தை சேர்ந்த ஒரு பெண் மீது இளைஞருக்கு காதல் ஏற்படுகிறது.
இந்த காதலால் பின்னாளில் ஏற்படும் பெரிய போரின்போது நகரம் முழுவதும்
அழிக்கப்படுகிறது. இதனால் கோபமடைந்த மன்னன், 'யூ லூ கிங்' பாம்பு இனத்தை
சேர்ந்த மன்னனை சபிக்கிறார். நகரம் மறுபிறவி எடுக்கும்போது தான் அவர்
சாபத்திலிருந்து தப்பிப்பார் எனக்கூறியுள்ளார்.
இதன்காரணமாகவே அவர் கல் பாம்பாக மாறிவிட்டதாக அந்த புராணக்கதையை
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையே உள்ளுறை சேர்ந்த மக்களும் தற்போது நம்புகின்றனர்.
இந்த படங்கள் அனைத்தும் இணையத்தில்
வைரலாகி வந்த நிலையில், பாம்பின் தலைப்பகுதி வேறு இடத்திலும்,
உடல் பகுதி வேறு இடத்திலும் எடுக்கப்பட்ட
படங்கள் என மக்கள் தொடர்புத்துறை விளக்கம்
கொடுத்துள்ளது.





Comments
Post a Comment