- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
உலகப்புழகப்பெற்ற பல ஓவியங்களின் சொந்தக்காரரான டாவின்சியைச் சுற்றி எப்போதும் ஓர் சர்ச்சை சுழன்று கொண்டேயிருப்பது வாடிக்கையாகிவிட்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஓவியத்தில் பெரும் சாதனையை படைத்தவர் அவர். 1452 ஆம் ஆண்டு பியரோ டாவின்சி தந்தைக்கும் காத்ரீனா அம்மாவுக்கும் ஆன்கியானோவில் பிறந்த குழந்தை தான் லியானர்டோ டாவின்சி. இளவயதிலேயே தாய்தந்தை பிரிந்து விட்டனர். இதனால் இளவயதிலிருந்து தாயின் அன்பு கிடைக்காமல் ஏங்கினார் டாவின்சி. அந்த தனிமையை போக்க தன் கவனத்தை ஓவியத்தின் மீது திருப்பினார். மிக இளவயதிலிருந்தே ஓவியத்தின் மீது அதீத ஆற்றல் கொண்டவராகவும் பெரு விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார். மகனின் ஓவிய ஆற்றலைக் கண்ட அப்பா, வெர்ரோச்சியோவின் ஓவியப் பயிற்சி கூடத்தில் மகனை சேர்த்து விட்டார். அங்கே சேர்ந்த மகனோ, ஓவியம் மட்டுமல்லாது பல்வேறு கலைகளையும் கற்றுக் கொண்டார். அதுவரை இயற்கை காட்சிகள் மட்டுமே வரைந்த டாவின்சி, அதன் பிறகு தான் பார்க்கிற மனிதர்களையும், கற்பனையில் வருகிறவர்களையும் தீட்ட ஆரம்பித்தார்.

வதந்திகள் : உலகப் புகழ்ப்பெற்ற பல்வேறு ஓவியங்களை வரைந்த டாவின்சியின் ஓவியங்கள் பல இன்றைய நவீன கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாகவும் இருந்திருக்கிறது. இவ்வளவு புகழ்ப்பெற்றவரைச் சுற்றி சர்ச்சைகள் இல்லாமலா இருக்கும். அவர் மறைந்து நூற்றாண்டுகள் கடந்தாலும் அவரது ஓவியங்கள் எப்படி அவரது புகழை பறைசாற்றுகிறதோ அதே போல அவரைச் சுற்றியிருக்கும் வதந்திகளும் அவரை உயிர்ப்புடனே வைத்திருக்கிறது.

சல்வேட்டர் முண்டி : இயேசு கிறிஸ்துவின் ஓவியம் இது. அந்த ஒவியத்தை சற்று அருகில் வைத்துப் பார்த்தால், படத்தில் இருக்கும் இயேசுவின் கையில் ஓரு கண்ணாடி உருண்டை இருக்கிறது. அது அப்படியே பின்னால் இருப்பதை ட்ரான்ஸ்பரண்ட்டாக காண்பிக்கிறது. லாஸ் ஆஃப் ஆப்டிக்ஸ் படித்த டாவின்சி எப்படி இவ்வளவு பெரிய தவறைச் செய்தார் என்பது தான் இப்போதைய குழப்பம்.
என்ன குழப்பம் : அந்த ஓவியத்தில் இயேசுவின் உடை நீல நிறத்தில் இருக்கிறது. இயேசு கையில் வைத்திருக்கும் அந்த கண்ணாடி உருண்டை அப்படியே எப்படி பிரதிபலிக்க முடியும். கண்ணாடியின் தன்மைப்படி அவை அப்படியே இல்லாது அந்த கண்ணாடி உருண்டைக்கு பின்னால் இருக்கும் பகுதி சற்று பெரிதாகவும், தலைகீழாகவும் தெரிந்திருக்க வேண்டுமே! பிறர் இந்த தவறைச் செய்தால் கூட அவர்களுக்கு இந்த அறிவியல் தெரியாது எனலாம். ஆனால் டாவின்ஸ் லா ஆஃப் ஆப்டிக்ஸ் கரைத்து குடித்தவர் ஆயிற்றே.

இது டாவின்சி வரைந்த புகழ்ப்பெற்ற சுவர் ஓவியங்களில் ஒன்று. தி லாஸ்ட் சப்பர் என்று அழைக்கப்பட்ட யேசுவின் கடைசி விருந்து குறித்த ஓவியம் இது. இதனை 1495 ஆம் ஆண்டிலிருந்து வெவ்வேறு கால கட்டங்களில் தொடர்ந்து 1498 ஆம் ஆண்டு ஓவியத்தை முழுவதுமாக வரைந்து முடித்திருக்கிறார். 1954வரை பல்வேறு ஓவியர்களால் இந்த ஓவியம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஓவியம் இருந்த சுவரின் மறுபக்கம் சமையலறையாக இருந்ததினால் ஓவியம் பொலிவிழந்தது.

இருவரும் ஒருவரே : இந்த ஓவியத்தை வரைவதற்கு முன்னர் டாவின்சிக்கு மாடலாக சிலர் வந்திருக்கிறார்கள். அவர்களில் ஜூடாஸுக்கும் ஜீசஸுக்கும் ஒரே மாடல். இந்த ஜூடாஸ் என்பவர் யேசுவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவர். இதனை ஆரம்பத்தில் கவனிக்க மறந்து விட்டார் டாவின்சி. ஒரு வழியாக அந்த ஓவியத்தை முடிக்கும் தருவாயில் தான் அதனை கண்டுபிடித்திருக்கிறார் டாவின்சி.

கதை : இது குறித்த இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது. இயேசுவை மட்டும் மையமாக வைத்து முதலில் அந்த ஓவியத்தை டாவின்சி வரைந்து விட்டார். பின்னர் ஜூடாஸுக்கு மாடல் தேடியிருக்கிறார். அவர் பைபிளில் படித்த அதே முக ஒற்றுமையுடன் யாரும் கிடைக்கவில்லை. ஒரு வழியாக அதீத மதுபோதையில் தெருவோரம் படுத்துக் கிடந்த ஒருவரை பார்த்ததும் அப்படியே ஜூடாஸ் சாயல் இருப்பதாக தோன்றவே அவரை அழைத்து வந்து அவரை மாடலாக வைத்து ஓவியத்தை வரைந்து முடித்து விட்டார். அதன் பின்னர் தான் இதே ஜூடாஸ் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஜீசஸுக்கு மாடலாக வந்து நின்ற நபர் என்று தெரிந்திருக்கிறது.

இசபெல்லா : சமீபத்தில் இசபெல்லா டி எஸ்டீ என்பவரின் ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஓவியத்தின் தன்மை, அதன் நுணுக்கங்களை வைத்து அது டாவின்சியின் ஓவியமாகத்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டது. இதில் அடங்கியிருக்கிற இன்னொரு ஆச்சரியம் இந்த இசபெல்லா டாவின்சியின் மிகவும் புகழ்ப்பெற்ற மோனலிசாவின் முகத்தை பிரதிபலிப்பது தான். அதோடு மோனலிசா மற்றும் இசபெல்லா இருவரது சிரிப்பும் ஒரே மாதிரி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

பெண்ணுடன் : டாவின்சி வரைந்த பல ஓவியங்களில் இது முதன்மையானது. பெண்ணொருவர் ஆட்டுக்குட்டியுடன் இருப்பார். இதனை ஸ்கேன் செய்து பார்த்த போது ஆராய்ச்சியாளர்களே அசந்து விட்டார்களாம். இதனை இரண்டு கட்டங்களாக டாவின்சி வரைந்திருக்கிறார். முதலில் பெண்ணை மட்டும் வரைந்திருக்கிறார். இரண்டாவது கட்டமாகத்தான் எர்மைன் எனப்படக்கூடிய விலங்கை சேர்த்திருக்கிறார். ஆனால் பார்க்கையில் அவை ஒரே ஓவியமாகத் தான் நமக்கு தெரிகிறது.

இடது கை பழக்கம் : இவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுகளுடைய ஓவியங்களைக் கூட மிக லாவகமாக வரைந்த டாவின்சி இடது கை பழக்கமுடையவர். நாம் எல்லாரும் எழுதும் போது இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் எழுதுவோம். ஆனால் டாவின்சி வலது பக்கத்திலிருந்து இடது பக்கம் எழுதும் வழக்கமுடையவராக இருந்திருக்கிறார். அவரின் எழுத்துக்களை சாதரணமாக படிக்க முடியாது. மாறாக முகம் பார்க்கும் கண்ணாடியின் வழியே அதில் விழுகிற பிம்பமாகத்தான் நம்மால் படிக்க முடியும்.

டாவின்சியின் உடல் எங்கே? : டாவின்சி இறந்த பிறகு அவருடைய உடல் சாப்பல் பிரான்சியில் இருக்கும் ஆஃப் செயிண்ட் ஃப்ளோரிட்டனில் புதைக்கப்பட்டது. காலப்போக்கில் அந்த தேவாலயம் முற்றிலும் சிதைக்கப்பட்டது. அங்கே இருந்த கல்லறையிலிருந்து கற்களும் பெயர்த்து எடுக்கப்பட்டது. அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து அந்த இடத்தில் அகழ்வாராச்சியில் ஈடுப்பட்ட போது அங்கே ஓர் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. எல்லாரும் அதனைத்தான் டாவின்சியின் உடல் என்கிறார்கள். டாவின்சி புதைக்கப்பட்டதோ செயிண்ட் ஃப்லோரெண்டின், இந்த எலும்புக்கூடு செயிண்ட் ஹூபெர்ட் அருகில் எடுக்கப்பட்டது அதனால் இது டாவின்சியின் எலும்பு அல்ல என்று ஒரு தரப்பினர் மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
Comments
Post a Comment